Skip to main content

Madurai History Questions For Tnpsc And UPSC Exams



1. மதுரை - சிறு குறிப்பு வரைக
மதுரை தமிழ்நாட்டின் மிக முக்கியமான தென்மாவட்டங்களில் பழமையான ஒன்று. இம்மாவட்டம் பண்டைய காலந் தொட்டே மிகவும் புகழ் பெற்ற நகரமாகும்.. இந்நகரத்திற்கு "தூங்கா நகரம்" சிறப்புப் பெயரும் உண்டு. சங்ககாலத்தில் பாண்டிய, சேர, சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கென தனிச் சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த பெருமை இந்நகரையேச் சேரும். மதுரை நகரம் வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது.

2. மதுரை நகரத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் யாவை ?
மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் போன்றவை மதுரை நகரத்தின் மிக குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத் தலங்கள் ஆகும். மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி மற்றுமொரு முக்கியமான கோடை சுற்றுலாத் தலமாகும்

3. மதுரை நகரத்தில் நடை பெறும் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா எது?
சித்திரை மாதத்தில் நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மிகப் பிரசித்தி பெற்ற, லட்சக்கணக்கான மக்கள் கூடும் திருவிழா ஆகும். இத்திருவிழா சித்திரை திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

4. மதுரை நகரத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள குறிப்பிடத்தகுந்த பெருமை என்ன?
சங்க காலத்தில் தமிழ் மொழிக்கென தனிச் சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த பெருமை மதுரை மாநகரத்திற்கே உண்டு.

5. மதுரையில் நடைபெற்ற சிலப்பதிகார இலக்கிய நிகழ்வு என்ன ?
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில், கதையின் நாயகி கண்ணகி, பாண்டிய மன்னனிடம் தன் கணவன் கோவலனின் மரணத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்த சம்பவமே மதுரையின் மிக முக்கிய இலக்கிய நிகழ்வாகும்

6. மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் எந்த ஆற்றினைச் சார்ந்து இருக்கிறது ?
மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் வைகை ஆற்றினால் பூர்த்தி செய்யப்படுகிறது

7. மதுரை மாவட்டத்தின் போக்குவரத்து பற்றி சிறுகுறிப்பு வரைக.
மதுரையில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையம் துபாய், கொழும்பு, மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் மற்றும் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களுக்கும் நேரடி வானூர்திச் சேவையை அளிக்கிறது. இந்தியாவின் மிக முக்கிய நகரங்களை தொடருந்துகள் இருப்புப்பாதைகள் மூலமாகவும், சாலை போக்குவரத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூலமாகவும் மதுரையுடன் இணைக்கின்றன.


8. மதுரையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய கல்வி நிலையங்கள் யாவை?
மாவட்டத்தில் உள்ள மதுரை மருத்துவக் கல்லூரி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, மதுரை விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்றவை குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்கள் ஆகும்.

9. மதுரை நகரத்திற்கு உள்ள மாற்றுப் பெயர்கள் என்ன?
மதுரை மாநகரம் கூடல் நகரம், மல்லிகை மாநகரம், நான்மாடக்கூடல். திருவாளவை என்ற வேறு சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது

10. மதுரை மாவட்டத்தின் தொழில் வளம் பற்றி சிறு குறிப்பு வரைக.
மதுரை மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நெல்,கரும்பு,வாழை பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இம்மாவட்டத்தில் விளையும் மல்லிகைப் பூ உலகப் பிரசித்தி பெற்றது. ரப்பர், இரசாயன தொழில்கள் சம்பந்தமான தொழிற்சாலைகளும் மாவட்டத்திற்கு தொழில் வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகின்றன.

Comments

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.